×

மாநில வளர்ச்சிக்காகவே உள்துறை அமைச்சரை சந்தித்தேன்

காரைக்கால், பிப். 6: காரைக்காலில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் தமிழிசை பேசுகையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் செய்து தர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சிகிச்சைக்கு வருகை தரும் அனைவரும் நம்பிக்கையுடன் வரவழைக்கும் வகையில், மருத்துவர்கள் செயல்பட வேண்டும். மருத்துவர்கள் காரைக்காலில் பணி வேண்டாம், புதுவைக்கு வேண்டும் என வழக்கம் இன்னும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நோயாளிகள் மன நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மருத்துவர்கள் பொறுமையை இழக்க கூடாது மருத்துவர்கள் தாக்குதல் ஒப்புக் கொள்ள முடியாது. மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும், என்றார்.

முன்னதாக தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளில் சூரிய மின் சக்தி பேனல்கள் வைக்கப்பட்டால் மாநிலம் முழுவதும் சூரிய மின்சக்தி மிகுந்த மாநிலமாக மாறுமெனவும், குறைந்த செலவில் அதிக சக்தியை பெற முடியும். சூரிய மின்சக்தி திட்டம் மற்றும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவே உள்துறை அமைச்சரை சந்தித்தேன். அதற்குள்ளாக புதுச்சேரிக்கு வேட்பாளர் தேர்வு செய்தது போல, தகவல் வெளியாகி இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆளுகின்றவர்கள் கொடுக்கும் பணியைத்தான் சிறப்பாக செய்து வருகிறேன், என்றார்.

The post மாநில வளர்ச்சிக்காகவே உள்துறை அமைச்சரை சந்தித்தேன் appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Karaikal ,Lieutenant ,Governor ,Tamilisai ,Government General Hospital ,
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...